அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஆட்சிக்கு வர மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முதல்வர் பழனிசாமி அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். திமுக தலைவர் முக ஸ்டாலின் சினிமா செட்டிங் போன்ற கூட்டங்களை நடத்துகிறார். அவரை சந்திக்க முடியாமல் திமுகவினரே நொந்து போயுள்ளனர் என கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை அதிமுக முழுவீச்சில் எதிர்கொண்டு வருகிறது. அதிமுக மக்கள் பலத்தை நம்புகிறது. அதனால், மற்றவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. தற்போதைய ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஆட்சிக்கு வர மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார். சொன்ன வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றியுள்ளதால் ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் மு.க.ஸ்டாலின் உளறிவருகிறார் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…