ஈரோடு இடைத்தேர்தளுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 31-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், இபிஎஸ் தரப்பு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 70க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்மனுக்கள் மீதான பரிசீலினை இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் அமமுக விலகுவதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நட்சத்திர பேச்சாளர் என இரு தரப்பினரும் பட்டியல் வழங்கிய நிலையில், பழனிசாமி தரப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் பட்டியல் தந்த நிலையில் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.
பழனிசாமி தலைமையிலான அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் 40 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் பட்டியல் ஏற்கப்படவில்லை என தகவல் கூறப்படுகிறது.
unknown node