அமெரிக்கா ஈரான் போர் முடிவு...ஜெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்வு ஒரு கிராம் ரூ.14,200க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 08, 2026) தங்கம் விலை திடீரென கணிசமாக உயர்ந்துள்ளது.இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ரூ.14,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.295-க்கு விற்கப்படுகிறது.கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் ஏறுமுகத்தில் தொடங்கிய நிலையில், இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது.

இந்த திடீர் உயர்வு, திருமணம், விழாக்கள் மற்றும் முதலீடு ஆகியவற்றுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை சற்று அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் - ரூ.1,13,600 (ரூ.2,720 உயர்வு), ஒரு கிராம் - ரூ.14,200 (ரூ.340 உயர்வு)

அதைப்போல, 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது:ஒரு சவரன் - ரூ.1,23,928 (ரூ.2,968 உயர்வு) ஒரு கிராம் - ரூ.15,491 (ரூ.371 உயர்வு)

கடந்த வாரம் முழுவதும் ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் காலையில் சற்று குறைந்து மாலையில் உயர்ந்த நிலையில், இன்று புதன்கிழமை திடீரென பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பதற்றம் குறைந்ததால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான தேவை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.தங்கம் விலை தினசரி அடிப்படையில் மாற்றமடைந்து வருவதால், வாங்குவதற்கு முன் சமீபத்திய விலை நிலவரத்தை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அமெரிக்கா ஈரான் போர் முடிவு...ஜெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை!