அமலாக்கத்துறைக்கு விசாரிக்க அதிகாரம் உண்டு; கைது சட்டபூர்வமானது தான்... நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.! 

அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜியை, காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உண்டு என நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.

Senthilbalaji case edr

அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜியை, காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உண்டு என நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைதுசெய்ததில் விதிமீறல்கள் இருப்பதாக, செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உய்ரநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து இருந்தார். முதலில் இந்த வழக்கு விசாரணையில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதன்படி 3-வது நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இன்று வழக்கின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் இன்று நீதிமன்றத்தில் முழுதாக சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னதாக இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட நீதிபதிகளில், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் கருத்துடன் தான் ஒத்துப்போவதாக தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர்தான். இதனால் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும், தடை கோர முடியாது, தான் குற்றமற்றவர் என்பதை செந்தில் பாலாஜி நிரூபிக்கவேண்டும், என நீதிபதி  கார்த்திகேயன் கூறியுள்ளார்.

மேலும் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிந்ததும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும், சிகிச்சையில் இருந்த நாட்களை அமலாக்கத்துறையின் காவலில் எடுத்த நாட்களாக கருத முடியாது எனவும் கூறிய மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், நீதிமன்ற காவலும் சட்டபூர்வமானது தான் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பு விஷயத்தில் நீதிபதி பரதச்சக்ரவர்த்தியின் தீர்ப்பில் தான் ஒத்துப்போவதாகவும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல எனக்கூறி வழக்கை நிராகரித்து மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.