மருத்துமனையில் இருந்த வண்ணம் அதிமுக-வுக்கு வாக்கு சேகரிக்கும் பிரபல நடிகர்…!

மருத்துமனையில் இருந்த வண்ணம் அதிமுக-வுக்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் கார்த்திக்.
பிரபல நடிகரும், மனித உரிமைகள் கட்சி தலைவருமான கார்த்திக், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பதாக இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில், அவர் கட்டிலில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இருந்தபோது, இரட்டை விரல்களை உயர்த்திக் காட்டி, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.