தினகரன் கட்சியில் இணைந்தார் பிரபல பாடகர் மனோ!!

This news gives information about the famous singer Mano joined the Dinakaran party

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து வருகின்றது.

இன்று பிரபல  திரைப்பட பாடகர் மனோ அமமுக கட்சியில்,தினகரன் முன்னிலையில் இணைந்தார்.

ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.அந்த வகையில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கிய நிலையில்,பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றார்.பின்னர் முதலமைச்சராக பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டார்.இதன் பின்  சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.அந்த வேலையில் சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்ற தொடங்கியது எடப்பாடி-பன்னீர்செல்வம் அணி.

unknown node

இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.மேலும் தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார்.

தற்போது மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து வருகின்றது.அதேபோல் தினகரன் தனது கட்சியை வலுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று பிரபல  திரைப்பட பாடகர் மனோ அமமுக கட்சியில்,தினகரன்முன்னிலையில் இணைந்தார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் பாடலைப்படி பிரபலமானவர் பாடகர் மனோ.இவர் சுமார்  50,000 பாடல்கள் பாடியுள்ளார்.