மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது – மு.க.ஸ்டாலின்

MK Stalin said that the central government was acting in favor of corporate companies without thinking about the welfare of the farmers.

விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிற நிலையில், இதற்க்கு ஆதரவாக பல கட்சி தலைவர்களும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தடையை மீறி திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்கள், விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.