பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

The final hearing in the case of Cory Perarivalan, who is seeking his release in the Supreme Court, is taking place today.

உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

மறுபுறம் உச்சநீதிமன்றத்தில்  தன்னை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.இதனால்   பேரறிவாளன் விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.