இன்று முதல் அண்ணா பல்.கழகத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
நேரடி எழுத்துத் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் கேட்ட பொறியியல் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று செமஸ்டர் தேர்வுகள் டிச.13 ஆம் தேதிக்கு பதில் டிச.27 இல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும்,பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு,எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக உறுதி அளித்திருந்தது.
இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. மேலும்,மாணவர்களுக்கு இனி ஜனவரி வரை நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்படும் என்றும் செய்முறைத்தேர்வு, Viva Voce ஆகியவற்றையும் விரைந்து நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,ஜனவரிக்கு பிறகு முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளையும் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025