தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்- அன்புமணி

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் போது தர்மபுரிக்கு மட்டும் தடை ஏன்  என்றும்  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.