பள்ளிக்கல்வித்துறையின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

ஆசிரியை நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்.

Madras high court

ஆசிரியை நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்.

ஆசிரியை நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி 6 ஆண்டுகளுக்கு பின் தாக்கல் செய்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு ரூ.500 அபராதமாக செலுத்தவும் பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2016ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என ஆசிரியை தரப்பில் 3 முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், 6 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வித்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.