சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதில்லை.!

கொரோனா வைரஸ் இந்தியாவில் 110 பேரை தாக்கி உள்ளது.மேலும் இரண்டு பேர் இறந்துள்ளனர்.இதனால் மத்திய ,மாநில அரசுகள் பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் 110 பேரை தாக்கி உள்ளது.மேலும் இரண்டு பேர் இறந்துள்ளனர்.இதனால் மத்திய ,மாநில அரசுகள் பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதனை அடுத்து கொரோனா பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்தது.இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையெடுத்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த உறுப்பினர்கள் , பணியாளர்கள்  அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக சட்டசபையில் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை, மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு  அனுமதி இல்லை என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.