சென்னை:காக்கி உடையின் கம்பீரத்தையும், அவர் மனதில் இருக்கின்ற அன்பின் ஈரத்தையும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களின் செயல் வெளிப்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறதுஅந்த வகையில்,சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள்,உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட அந்த இளைஞர் உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக அவரை தனது முதுகில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனால்,அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில்,காக்கி உடையின் கம்பீரத்தையும், அவர் மனதில் இருக்கின்ற அன்பின் ஈரத்தையும் அவருடைய செயல் வெளிப்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“சென்னை மாநகரத்தின் காவல் ஆய்வாளர் ஸ்ரீமதி ராஜேஸ்வரி அவர்கள் இந்த இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் தக்க நேரத்தில் சேர்ப்பதற்கு உதவியிருக்கிறார்! காக்கி உடையின் கம்பீரத்தையும், அவர் மனதில் இருக்கின்ற அன்பின் ஈரத்தையும் அவருடைய செயல் வெளிப்படுத்துகிறது. வாழ்க அவருடைய சேவை”,என்று பாராட்டியுள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…