உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால், அவரது இழப்பு, ஒரு பேரிடியாக தான் உள்ளது.
நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விவேக்கின் பூத உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘மனிதன் என்றால், சிலரை சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. ஆனால், எல்லாருக்கும் பிடிக்க கூடிய ஒரு மனிதனாக வாழ்ந்தவர் தன சகோதரன் விவேக். இவர் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான நபர்.
அப்துல்கலாம், விவேக்கிற்கு ஒரு கோடி மரக்கன்றுகளை நாடுங்கள் என அறிவுறுத்தினர். எனக்கு தெரிந்து இதுவரை 37 லட்சம் மரங்கன்றுகளை நட்டுள்ளார். இப்படிப்பட்ட சிறந்த மனிதனை இழந்துள்ளது,மிகவும் கஷ்டமாக உள்ளது. அவர் நம்முடன் இல்லை என்பதை மனசு நம்ப மாறுகிறது. உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால், அவரது இழப்பு, ஒரு பேரிடியாக தான் உள்ளது. அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து க் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…