பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது தொடர்பான ஆதாரம் கிடைத்தவுடன் வெளியிடுவேன் என பழ.நெடுமாறன் பேட்டி.
கடந்த 13-ஆம் தேதி தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார். அவரின் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில் தான் இருக்கின்றனர் என்றும் பிரபாகரன் விரைவில் வெளியே வருவார் எனவும் கூறி அதிர வைத்தார். பிரபாகரன் அனுமதியுடன் இதனை அறிவிக்கிறேன் என்றும் ஒரு நெருப்பை பற்ற வைத்தார்.
இலங்கை அரசு மறுப்பு:
unknown nodeபிரபாகரன் உயிருடன் உள்ளதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியதை அடுத்து, இலங்கை அரசு திட்டவட்டமாக அதனை மறுத்தது. நெடுமாறன் ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறனின் கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக மறுத்தனர்.
வழக்கறிஞர் எச்சரிக்கை:
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று வரும் செய்தி முற்றிலும் தவறான வதந்தி, வேண்டும் என்றே சில அரசியல் காரணத்திற்காக பரப்பப்படுகிறது என மூத்த வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு பிரபாகரன் வீரமரணம் அடைந்தார், அவர் உடல் அடையாளம் காட்டப்பட்டு, மரியாதையுடன் தகனம் செயப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் சென்று வந்த பிறகு பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
unknown nodeஇதில், ஏதோ சதி உள்ளது. பழ.நெடுமாறன் திராவிடர் கழகத்திற்கு எதிரானவர், இப்போது, பாஜகவிடம் லாபத்தை எதிர்பார்த்து விலைபோய்விட்டார். சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடருவோம் எனவும் கூறியிருந்தார்.
ஆதாரம் வெளியிடுவேன்:
unknown nodeஇந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது குறித்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் தந்துள்ளது என மதுரையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரபாகரன் தொடர்பான ஆதாரம் கிடைத்தவுடன் ஊடகத்தினரை சந்தித்து வெளியிடுவேன் என மீதும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார்.