அக்காவின் மறைவு செய்தி கேட்டு ஒலிம்பிக் நாயகி தனலெட்சிமி விமான நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார்.
ஒலிம்பிக் தகுதி சுற்றில் தமிழக வீராங்கனை தனலட்சுமி பந்தய தூரத்தை மிக குறைவான நேரத்தில் கடந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், போட்டிக்கு தயாராகவும், டோக்கியோ புறப்படுவதற்காகவும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலேயே தனலட்சுமி தங்கியிருந்தார். அங்கிருந்து டோக்கியோ புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் கடந்த 12-ம் தேதி தனலட்சுமி மூத்த சகோதரி நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
தனலட்சுமி சகோதரி உயிரிழந்த செய்தியை அவரிடம் சொன்னால் அவரது கவனம் சிதறிவிடும் என்பதற்காக அவரது குடும்பத்தினர் சகோதரி இறந்ததை தனலெட்சுமியிடம் மறைத்துள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்க சென்றிருந்த ஒலிம்பிக் நாயகி தனலட்சுமி திருச்சி விமான நிலையம் வந்த அப்பொழுது அவருக்கு ஆரவாரமாக மாலை அணிவித்து, மரியாதை கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
விமான நிலையத்தில் தனலட்சுமியிடம் அவரது சகோதரி இறந்துவிட்ட செய்தியை உறவினர் ஒருவர் தெரிவித்தார். உடனடியாக துக்கம் தாங்கமுடியாமல் விமான நிலையத்திலேயே மண்டியிட்டு கதறி தனலெட்சுமி அழுதுள்ளார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அதன் பின் அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இது குறித்து தனலட்சுமி கூறுகையில், தனது சகோதரி தனக்கு என்று வாழாமல் தனக்காக வாழ்ந்தவர் எனவும், தான் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவர் அக்கா எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…