சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து, தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து பேசினார்.
அப்போது, “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 2021 – 2022ஆம் ஆண்டில் 9.1 சதவீதமாக உள்ளது.” என்று கூறினார்.
மேலும், “கடந்த 2021 – 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1,54,557 ஆக இருந்தது. அதே போல, 2022 -2023 ஆண்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727 ஆக உயர்ந்துள்ளது.” என்றார்.
