போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தவர் பரிதாபமாக பலி....!

Disposal of saffron cloths in the Ganges River in Uttar Pradesh.

போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தவர் பரிதாபமாக பலி. 2 பேர் மருத்துவமனையில் அனுமதி.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுபான பிரியர்கள் பலரும் திண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக பணியாற்றி வருபவர் சங்கர். இவர் போதைக்காக கடந்த 3 நாட்களாக பெயிண்டில் கலக்கும் தின்னர் என்ற ரசாயனத்தி எலுமிச்சை சாற்றை பிழிந்து குடித்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, இவர் தன்னுடைய நண்பர்களான சிவசங்கரன், சுரேஷ், கிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து கூட்டாக இந்த ரசாயனத்தை குடித்துள்ளார். இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவருடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்பவர் எங்கு இருக்கிறார் என்றே கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை வயல்காட்டில் தேடியும் கிடைக்காத காரணத்தினால், காவல்துறையினர் தற்போது அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.