ரூ.1000 பொங்கல் பரிசு -இன்றும் வழங்கப்படுகிறது

பொங்கல் பண்டிகை வருவதையொட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனுடன் பொங்கல் பரிசு

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தமிழகத்தில்  இன்றும்  பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை வருவதையொட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ  சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.கடந்த 9-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு  வழங்கப்பட்டுவருகிறது.மேலும் நாளையும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.