3 மணி மட்டுமே சென்னையில் இருக்கும் பிரதமர்..!

It has been reported that Prime Minister Modi, who will arrive in Tamil Nadu on February 14, will stay in Chennai for only three hours.

பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி மூன்று மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14-ம் தேதி டெல்லியில் இருந்து காலை 7.50-க்கு புறப்படும் பிரதமர் 10:35 மணி அளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். காலை 11.15 மணி அளவில் நேரு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர். 3 மணிநேரம் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் 01:35 மணிக்கு பிரதமர் கொச்சி புறப்படுகிறார்.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். பிரதமர் மோடி மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல  திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

அண்மையில் இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், மீண்டும் அவர் வருகின்ற பிப்ரவரி 14-ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.