22 ஆண்டு திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது-சீமான் ..!

The problem that has not been solved in 22 years of DMK rule cannot be solved in 100 days, he said, adding that the DMK is the problem for the people.

கோவையில் நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாம் தமிழர் கட்சி தனித்து 234 தொகுதிகளில் போட்டியிடும். அதில், 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வருகின்ற மார்ச் 20-ஆம் தேதி 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று சீமான் தெரிவித்தார். நாங்கள் வேலை எடுத்தபோது அனைவரும் கேலி, கிண்டல் செய்தனர். நான் ஆத்மார்த்தமாக நேசித்து உணர்வு பூர்வமாக செய்தேன். ஆனால் இப்போது வாக்கு வேண்டும் என்பதற்காக வேலை தங்களது கையில் எடுத்து வருகின்றனர். 22 ஆண்டு திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது, திமுக தான் மக்களுக்கு பிரச்சினை என கூறினார்.

நான் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு தமிழக மீனவனையும் இலங்கை கடற்படையினரால் உயிரிழக்க விடமாட்டேன். அப்படி ஒரு மீனவர் உயிரிழந்தால் நான் எனது பதவியை விட்டே விலகி விடுவேன் என கூறினார்.