இன்று முதல் மெரினாவிற்கு பொதுமக்கள் செல்லலாம்...!

It has been announced that the Marina Beach will be open from today. Especially the public who come to the beach must wear a mask

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்க சுற்றுலாத் தலங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதில் மெரினா கடற்கரையும் மூடப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், மெரினா கடற்கரையை மட்டும் திறக்காமல் அரசு அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை அரசு திறக்காவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என்று கடுமையாக எச்சரித்தது.

இதனையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரையை திறப்பது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று  முதல் மெரினா கடற்கரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அதனை காவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.