தனது உயிர் போனதோடு, தாயையும், சகோதரனையும் சிறைக்கு அனுப்பிய மகன்.! நடந்தது என்ன.?

மதுரை மாவட்டம் வண்டியூர் அருகே சுந்தர் நகர் 2-வது தெருவை சேர்ந்த சிக்கந்தர் மைதீன் என்பவரது மகன் அசாருதீன் தனது தாய் மற்றும் அண்ணன் யாசர் அரபாத் உடன் வாழ்ந்து

மதுரை மாவட்டத்தில், அசாருதின் என்ற இளைஞர் போதைக்கு அடிமையாகி தாய், தந்தையிடம் போதைப் பொருள் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தியதோடு, பெற்றோரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.

மனம் வெறுத்துப்போன தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் சேர்ந்து கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இந்த சசம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

மதுரை மாவட்டம் வண்டியூர் அருகே சுந்தர் நகர் 2-வது தெருவை சேர்ந்த சிக்கந்தர் மைதீன் என்பவரது மகன் அசாருதீன் தனது தாய் மற்றும் அண்ணன் யாசர் அரபாத் உடன் வாழ்ந்து வந்த நிலையில், அசாருதின் போதைக்கு அடிமையாகி தாய், தந்தையிடம் போதைப் பொருள் வாங்க பணம் கேட்டு அடிக்கடி துன்புறுத்தியதோடு, பெற்றோரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். மகனின் இதுபோன்ற செயலால் மனம் வெறுத்துப்போன தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் சேர்ந்து இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த அசாருதீனின் கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

unknown node

இது குறித்து தகவலறிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் மகனை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர்  உயிரிழந்த அசாருதீனின் உடலை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையாகிய இளைஞரின் செயலால் தனது உயிர் போனதோடு, தாயையும், சகோதரனையும் சிறைக்கு அனுப்பிய அவலம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.