கட்டட தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு.
இதுதொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்தாண்டு நடைபெற்ற 79வது வாரிய கூட்டத் கூட்டத் தீர்மானம் இனம் 5-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர், விபத்தில் மரணமடைந்தால், வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000 லிருந்து ரூ.2,00,000 ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடுமாறு கோரியுள்ளார்.
எனவே, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000 லிருந்து ரூ.2.00.000 ஆக உயர்த்தி வழங்க ஆணியிடப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் செலவினத்தை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நல நிதியிலிருந்து மேற்கொள்ளவும். மேலும், இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகையினை ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node