அரபிக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புயல் உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு ‘டவ்-தே’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது.
கேரளாவின் பெரும்பாலானபகுதிகளிலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.