ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடவில்லை என காவல்துறையினரிடம் புகார் அளித்த மாணவன்..!

ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடவில்லை என போலிஸாரிடம் புகார் அளித்த நான்காம் வகுப்பு மாணவன்.

ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடவில்லை என போலிஸாரிடம் புகார் அளித்த நான்காம் வகுப்பு மாணவன்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தர்மசுதன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில், தர்மசூதனை ஆசிரியர் கண்டித்ததையோடு, அவரை, பள்ளி வகுப்பறையில் அமர வைத்துள்ளார். 11 மணியளவில் இடைவேளையின் போதும் மாணவ மாணவிகள் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். ஆனால் ஆசிரியர் தர்மசுதனை வெளியே விடவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய உணவு இடைவேளைக்கு வீட்டு வந்த மாணவன் தனது தனக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டுள்ளதாக கூறியதால் பெற்றோர் அவனிடம் இது குறித்து விசாரித்த போது தன்னை சிறுநீர் கழிக்க ஆசிரியர் அனுமதிக்கவில்லை என்று அழுதுள்ளார்.

உடனே பெற்றோர் பள்ளிக்கு சென்று முறையிட்டனர். ஆனால் பள்ளியில் முறையான பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் முறையிட்டுஉள்ளார். அங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, மாணவனின் பெற்றோர் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவன் சாத்தான்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.  மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.