குடும்ப தகராறு டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை !!!!!

குடும்ப தகராலால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தூத்துக்குடி, மேலஅலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்தவர் லோகராஜ். இவர் கார் டிரைவராக பணியாற்றி

குடும்ப தகராலால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

தூத்துக்குடி, மேலஅலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்தவர் லோகராஜ். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர்  பகவதி. இவர்களுக்கு திருமணமாகி 14 மாதங்கள்ஆன நிலையில்  3 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

இந்நிலையில், நேற்று ஏற்பட்ட தகராறில் சண்டை முற்றிய நிலையில் மிகவும் வேதனை அடைந்த  லோகராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.