அருமை…ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் – ஒப்பந்த புள்ளி கோரிய தமிழக அரசு

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
இது தொடர்பாக,அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கன்னியாக்குமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல் பாலம் கட்டுவதற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த,டெண்டர் 04.05.2022 14.00 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே திருநெல்வேலி வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் (H), C&M மூலம் பெறப்படும்.
பணிகளின் விவரங்கள்,பணிகளின் தோராயமான மதிப்பு, EMD, டெண்டர் ஆவணங்களின் இருப்பு மற்றும் அனைத்து விவரங்களும் 14.03.2022 முதல் அரசு இணையதளத்தில் https://tntenders.gov.in/ இல் கிடைக்கும்.டெண்டரில் ஏதேனும் மாற்றங்கள் / திருத்தங்கள் இருந்தால்,அது அரசு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025