இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி..!தமிழகத்தை தாக்குமா ..!வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியால் தமிழ்நாட்டின் இதர கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியால் தமிழ்நாட்டின் இதர கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

unknown node

இந்தோனேசியாவில் ஏற்கனவே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலையில் இந்தோனேசியாவில் பளு என்ற மத்திய சுலவேசி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மீட்படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் இன்று சுலவேசி தீவை சக்தி வாய்ந்த சுனாமி தாக்கியது.மக்கள் உடனடியாக பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுனாமியால் 1 பலியாகி, 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் மக்கள் இறந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் இன்று  இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை என்று  தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி  ஏற்பட்ட 9.1 ரிக்டர்  அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததும், அதன் எதிரொலியாக  தமிழ்நாட்டில் சுமார் 9 ஆயிரம் பேர்க்கு மேல் பலியானதும் குறிப்பிடத்தக்கது.