தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 441 வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்று பனிமயமாதா பேராலயத்தின் 16-வது தங்க தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். ஜாதி மத பேதமின்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
தங்க தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
