அரிக்கொம்பன் யானையை பிடிக்க தேனி விரையும் பழங்குடியினர்..!

Arikomban elephant roaming in Theni Gampam area is being captured by the tribals.

arikompan

தேனி கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானையை பழங்குடியினரை வைத்து பிடிக்க நடவடிக்கை.

கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் பகுதியில், அரிக்கொம்பன் யானை நடமாட்டம் இருந்த நிலையில், இந்த யானைதாக்கியதில் பால்ராஜ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தை தொடர்ந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இகனையடுத்து, தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உலா வரும் அரிக்கொம்பன் யானையை பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, முதுமலையை சேர்ந்த பழங்குடியினர்களான பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் தேனி விரைகின்றனர்.