வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை – லதா ரஜினிகாந்த்

The rent for the Ashram school premises is being paid regularly. Lata Rajinikanth's explanation that there is no truth in the rent arrears.

ஆஸ்ரம் பள்ளி வளகத்துக்கான வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை என்று லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம்.

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளி, வாடகை பாக்கி தொடர்பாக பிரச்சினை நீடித்த வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வதாக ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது. இதற்கான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

கொரோனா காரணமாக பள்ளியை மாற்ற முடிவில்லை என்றும் மேலும் ஓர் ஆண்டு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி சங்கத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகாரத்தில், அந்தப் பள்ளியை 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பள்ளி தற்போதைய முகவரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதித்தது.

இந்நிலையில், ஆஸ்ரம் பள்ளி வளகத்துக்கான வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை. கொரோனா காரணமாக ஏப்ரல் 2020 காலக்கெடுவுக்குள் வேறு இடத்துக்கு பள்ளியை மாற்ற முடியவில்லை. எங்கள் மனுவை ஏற்று ஏப்ரல் 2021 வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது என்று லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.