#BREAKING: பைக்கில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி இல்லை..? உயர்நீதிமன்றம்..!

High Court instruction to warn that removal of windshields on two-wheelers is not a warranty.

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என எச்சரிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

பைக்கில் ரியர் வியூ கண்ணாடிகளை அகற்றுவதால் விபத்துகள் அதிகரிப்பதாக ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும் வகையில் வாகன விற்பனையாளர்களை அறிவுறுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கண்ணாடி பொருத்தவேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.