தமிழகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டங்கள் இதோ!

Union Minister Amit Shah arrived in Tamil Nadu on a two-day visit, he laid the foundation stones for several projects.

மத்திய அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தடைந்த நிலையில், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா, 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதனைதொடர்ந்து மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டங்கள்:

ரூ.61,843 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கோவை – அவிநாசி சாலையில் ரூ.1.620 கோடி மதிப்பிலான உயர்மட்ட சாலை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

காமராஜர் துறைமுகத்திற்கு ரூ.900 கோடியில் புதிய இறங்குதளம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

திருவள்ளூர் மாவட்டம், கண்ணன்கோட்டை, தேர்வாய்க்கண்டியில் ரூ.380 கோடி மதிப்பில் புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார், மத்திய அமைச்சர் அமித்ஷா.

சென்னை வர்த்தக மையத்தை ரூ.309 கோடி மதிப்பில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 3 திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

கரூர் மாவட்டம், நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு அமித்ஷா அடிக்கல்.