உதடுகளில் திருக்குறள், பாரதி...உள்ளம் முழுக்க இந்திவெறி – சு.வெங்கடேசன் எம்பி

உதடுகளில் திருக்குறள், பாரதி. ஆனால் உள்ளம் முழுக்க இந்திவெறி என மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில்,

M.P venkatesan Neet

உதடுகளில் திருக்குறள், பாரதி. ஆனால் உள்ளம் முழுக்க இந்திவெறி என மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், இந்தியில் மசோதாக்களின் பெயர் நியாய சன்கிதா, சுரக்ச சன்கிதா, பாரதீய சாக்சிய… என கடைசி நாளில் 512 பக்க மசோதாக்கள் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை இந்திமயமாக்கும் செயல்திட்டத்தின் வெறிகொண்ட முன்னெடுப்பு இது. உதடுகளில் திருக்குறள்…பாரதி… உள்ளம் முழுக்க இந்திவெறி என்றும் பாஜகவின் உண்மை முகம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் நேற்று இந்திய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய சட்டங்களை புதுப்பிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் இந்தியா என்ற பெயரை பாரதிய என மாற்ற மசோதா தாக்கல் செய்தார்.

அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) பெயரை “பாரதிய நியாய சங்ஹீத” என மாற்றவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பெயரை “பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத” என மாற்றவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (IEA) பெயரை “பாரதிய சக் ஷயா” என மாற்றவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node