கந்துவட்டி காரணமாக பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டியை கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
unknown nodeதிருவண்னாமலை அருகே கந்துவட்டி விவகாரத்தில் பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டியை கடத்தி தனியறையில் அடைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவத்தில் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
unknown nodeகந்துவேட்டிக்கு ஆளான இச்சம்பவம் திருவண்ணாமலை பே – கோபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் பாரதி இந்நிலையில் அதே தெருவில் வசிக்கும் மணிகண்டன் என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 38 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் பெற்ற தொகைக்கான உரிய வட்டியை முறையாகச் செலுத்தி வந்த நிலையில், வட்டியுடன் சேர்த்து பாரதி 80 ஆயிரம் ரூபாயை தரவேண்டும் எனக் கூறிய மணிகண்டன், அவர்கள் வசிக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டதாகக் கூறப்படுகிறது.மணிகண்டனின் இந்த முடிவுக்கு பாரதி மறுப்பு தெரிவிக்கவே இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பாரதியின் 3 மாத கைக்குழந்தையையும், பாரதியின் பாட்டியான குப்பு என்பவரையும் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று தனது வீட்டில் உள்ள தனியறையில் அடைத்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
unknown nodeஇதனால் அதிர்ச்சியடைந்த பாரதி இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் தனியறையில் அடைக்கப்பட்டிருந்த 3 மாத குழந்தை மற்றும் மூதாட்டி குப்புவையையும் மீட்ட போலிசார் அவர்களை பாரதியிடம் ஒப்படைத்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கந்துவேட்டிக்கு ஆசைப்பட்டு கொள்ளை கொள்ளும் கயவர்கள் மத்தியில் அவர்களின் வலையில் சிக்கி தவிக்கும் சமானியர்கள் இது போன்ற சம்பவங்களில் சிக்கி தவிக்கின்றனர்.
DINASUVADU