இந்த தாடியா…? அந்த தாடியா…? சவால் விட்ட கமலஹாசன்…!

ஜெயலலிதா போல நானும் கேட்கிறேன். அந்த அம்மா இந்த லேடியா? அந்த மோடியா? என்று கேட்டார்கள். நான் கேட்கிறேன், இந்த தாடியா…? அந்த தாடியா…?
தமிழக சட்ட தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அணைத்து கட்சியினரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்ட மன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், திருச்சி பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய கமலஹாசன், ‘ கமல்ஹாசன் ஹெலிகாப்டர்ல போறாரு, இவ்வளவு பணம் யாரு கொடுத்தது. பாஜகவினர் தான் கொடுத்தார்கள் என்று கூறுகிறார்கள். இதில் ஏதாவது நியாயம் இருக்கா? நான் மேடைக்கு மேடை அவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறேன்.
கோவை தெற்கு தொகுதியை பாஜக நம்பி இருப்பதால் தான், நான் தேடி போய் அந்த தொகுதியில் நிற்கிறேன். நான் தேர்தலில் ஜெயித்த பின், பாஜக முன்பு திமுக கைகாட்தி நிற்கிறதா இல்லையா? என்று பாருங்கள். ஜெயலலிதா போல நானும் கேட்கிறேன். அந்த அம்மா இந்த லேடியா? அந்த மோடியா? என்று கேட்டார்கள். நான் கேட்கிறேன், இந்த தாடியா…? அந்த தாடியா…? என சவால் விட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025