இது மக்களவை தேர்தலுக்கான வெற்றி தொடக்கம் – அமைச்சர் செந்தில் பாலாஜி

இடைத்தேர்தல் வெற்றி என்பது மக்களவை தேர்தல் வெற்றிக்கான தொடக்கம் இது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

இடைத்தேர்தல் வெற்றி என்பது மக்களவை தேர்தல் வெற்றிக்கான தொடக்கம் இது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அளித்திருக்கும் மணிமகுடம் தான் இந்த தீர்ப்பு. இது வரும் மக்களவை தேர்தலுக்கான வெற்றி தொடக்கம். 40 தொகுதிகளிலும் முதலமைச்சர்  முக ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளராகள் பெரும் வெற்றி பெறுவார்கள்.

தேர்தலின் கடைசி நாள் பிரச்சாரம் வரைக்கும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அதிமுகவினர் கூறினர். வாக்குப்பதிவு அன்று தனது வாக்கை செலுத்திவிட்டு வந்து அதிமுக வேட்பாளர் 100% வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். தோல்விக்கான காரணத்தை தேடி வருகிறார்கள். அவர்கள் நினைத்த வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை, இதனால் விரக்தியில் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அளித்திருக்க கூடிய தீர்ப்பு என்பது முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்க க்கூடிய மகத்தான திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில்  மணிமகுடமாக அமைந்துள்ளது. தோல்வியை மறைப்பதற்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கான வாக்கு வங்கிகள் அவ்வளவுதான் எனவும் தெரிவித்தார்.