இது வெள்ளை அறிக்கை இல்லை, மஞ்சள் கடுதாசி – கமல்ஹாசன்

இது வெள்ளை அறிக்கை இல்லை, மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் என கமல்ஹாசன் ட்வீட்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் வரவேற்றும் வருகின்றனர்.
அதிமுக தரப்பில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை திசை திருப்பவே பொய்யான தகவல்களை திமுக வெளியிட்டுள்ளது என முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் குற்றசாட்டினர்.
இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை, மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025