இது வாட்ஸப் யுகம்! மாரத்தானில் ஓடும் திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகை.. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என அமைச்சர் உதயநிதி பேச்சு.

யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என அமைச்சர் உதயநிதி பேச்சு.

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி முன்பதிவு தொடக்கவிழா நடைபெற்று வருகிறது. இந்த தொடக்க விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், காந்தி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் மாரத்தான் போட்டி முன்பதிவு தொடக்கவிழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாரத்தானில் ஓடும் திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ 1,000 வழங்கப்படும் என அறிவித்தார். சட்டமன்றத்தில் கன்னிப்பேச்சிலேயே பேசியது திருநங்கைகளுக்காகத்தான். மத்திய சென்னையில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் சிலர் அருவறுப்பு அரசியல் செய்து வருகின்றனர், தவறான தகவல்களை அனுப்புகிறார்கள். இது வாட்ஸப் யுகம், அதிகமாக ரீச் ஆகனும், ரீடிவிட் ஆகனும்னு தவறான தகவல்களை பார்வர்டு செய்துவிடுகிறோம். செய்தி உண்மையா? இல்லையா என்று பகுத்தறிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.