கூட்டணிக்காக கட்சிகளை அதிமுக தேடிச்சென்றது இதுதான் முதன்முறை-தினகரன் 

This news gives information about This is the first time that the AIADMK seeks parties for the coalition -

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கூட்டணிக்காக கட்சிகளை அதிமுக தேடிச்சென்றது இதுதான் முதன்முறை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன்  தெரிவித்துள்ளார்.

2019 மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  3 மாதமாக மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்களிடம் ஆலோசித்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 22ஆம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது. ஓசூர் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார்.

கூட்டணி அமைக்கப்பட்ட அன்றே தோற்கடிக்கப்பட்ட கூட்டணி அதிமுக-பாஜக கூட்டணி .தேனி மக்களவை தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன். தென் மண்டலம் மட்டுமின்றி அனைத்து மண்டலங்களிலும் ஆதரவு உள்ளது.

பணமூட்டையுடன் சென்று வெற்றி பெறலாம் என்றால் 40 தொகுதிகளிலும் தொழிலதிபர்களை நிறுத்தலாமே? என்றும்  கூட்டணிக்காக கட்சிகளை அதிமுக தேடிச்சென்றது இதுதான் முதன்முறை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன்  தெரிவித்துள்ளார்.