இதுதான் காரணம்..! குரூப் 2 தேர்வு குளறுபடி குறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கம்!

சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி விளக்கம்.

சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி விளக்கம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு:

unknown node

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுதினர். இந்த சமயத்தில் தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. குரூப் 2 தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்திருந்தது.

டி.என்.பி.எஸ்.சி விளக்கம்:

unknown node

அதன்படி, தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, தேர்வு நடைபெற்றது. இருப்பினும், குரூப் 2 தேர்வு குளறுபடி காரணமாக தேர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் குளறுபடிகள் நடைபெற்றதால் டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது. வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம்.

டிஎன்பிஎஸ்சி செயலாளர் ஆலோசனை:

unknown node

தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதும் குளறுபடிக்கு காரணம். மேலும், வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனம்  அவுட்சோர்சிங் செய்ததும் குளறுபடிக்கு மாற்றொரு காரணம் என கூறியுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடி குறித்து டி.என்.பி.எஸ்.சி செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது குளறுபடி குறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.