இந்த முறை சட்டப் பேரவையில் எனது குரல் ஒலிக்கும் – பிரேமலதா விஜயகாந்த்..!

Premalatha Vijayakand said, "I am sure my voice will be heard in the assembly this time if our volunteers want it if the Temujin leader orders it."

இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தாமதிப்பதில் யாருக்கும் பயனில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதில் தாமதம் இன்றி தொடங்க வேண்டும். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது. சசிகலா வந்த பின் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எங்களுடைய தொண்டர்கள் அத்தனை பேரும் இந்த முறை நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும், என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் நான் இந்த முறை போட்டியிடுகின்றனா..? இல்லையா..? என்பது இந்த நிமிடம் வரை எனக்கு தெரியவில்லை. தேமுதிக தலைவர் ஆணையிட்டால் எங்கள் தொண்டர்கள் விரும்பினால் என்னுடைய குரல் நிச்சயமாக சட்டசபையில் இந்த முறை ஒலிக்கும் உறுதியாக நான் சொல்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.