வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் சிக்கி உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். அவரின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டு, அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுப்பிரமணியனின் உடலுக்கு அவரின் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அவரின் இறுதி ஊர்வலத்தில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். மேலும், சுப்பிரமணியனின் உடலை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மற்றும் தென்மண்டல ஐ.ஜி. முருகன் மற்றும் இதர காவலர்கள் சுமந்து வந்தனர். மையனத்தில் அவரின் உடலுக்கு தெண்மணடல ஐஜி முருகன், தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அஞ்சலி செலுத்திய நிலையில், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உயிரிழந்த சுப்ரமணியனின் மனைவிக்கு தமிழக டிஜிபி திரிபாதி ஆறுதல் செலுத்தினார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…