பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறாதவர்கள் இன்று காலை முதல் பெறலாம் ...!

It has been announced that those who have not received the Pongal special package can get it from this morning.

பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறாதவர்கள் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் முடிவடைந்த பின்பும் பொங்கல் தொகுப்பை பெறாதவர்கள் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 17ஆம் தேதி காலை 7 மணி முதல் சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படும். இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத, தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இன்று காலை முதல் நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.