"ஆயிரம் ஆண்டு பழமை"ஐம்பொன் சிலைகள் திருட்டு..!!

கொள்ளை போன செஞ்சி வள்ளிநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம், செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளை போன செஞ்சி வள்ளிநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது குறிப்பிடத்தக்கது.

மேலும்விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் உள்ள மல்லிநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டு பழமையானது. இந்தக் கோயிலில் சந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார்.

unknown node

இன்று வழக்கம்போல் கோயிலுக்கு வந்த பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மல்லிநாத தீர்த்தங்கரர் சிலைகள் இரண்டும், தர்நேந்திரர் சிலை ஒன்றும், பத்மாவதி சிலை ஒன்றும்,  ஜோலாம்பாள் சிலை ஒன்று என மொத்தம் 5 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டிருந்தன.

இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த சிலைகள் சமணர் காலத்தில் கட்டப்பட்டது  கோயிலின் சிலைகளை சர்வதேச கும்பல் திருடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் பல நாட்களாக நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது. கொள்ளை போன 5 சிலைகள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்புடையது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU