தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை!

ஜூலை 08 & 09 மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

Hero Image

சென்னை : தெற்கு குஜராத் முதல் மத்திய கேரளா வரை கடல் மட்டத்தில் நிலவும் காற்றுமுகத் தாழ்வுப் பாதை (Trough) காரணமாக, தமிழகத்தில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 07 (இன்று): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்று (மணிக்கு 40-50 கி.மீ) மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூலை 08 & 09: மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 10: தமிழகம் முழுவதும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 11: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 12 & 13: மலை மாவட்டங்களில் மிதமான மழை தொடரும். இருப்பினும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை!