கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
unknown nodeஇந்நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் மண்டல வாரியாக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவுடன் சிறப்பு நடவடிக்கைக் குழு இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.