தமிழக முதல்வர் வழங்கிய சிறப்பு விருதுகளின் தொகுப்பு! திருநெல்வேலி வீர தம்பதிக்கும் சிறப்பு விருது!

இன்று இந்தியா முழுவதும் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய

இன்று இந்தியா முழுவதும்73வது சுதந்திர தினவிழாகோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டைகொத்தளத்தில்தேசிய கோடியை ஏற்றி வைத்து மக்களிடையே உரையாற்றினார்.

பின்னர், ஒவ்வோர் துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. இதில்சிறந்த மாநகராட்சியாகசேலம்மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்தநகராட்சியாக முதலிடத்தில்தருமபுரியும்,இரண்டாவதாக வேதாரண்யம்நகராட்சியும்,மூன்றாவதாக அறந்தாங்கிநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. அடுத்ததாக, சிறந்தபேரூராட்சியில் முதலிடதிற்க்கான விருது மதுரை மாவட்டம்டி.கல்லுப்பட்டிக்கும், இரண்டாவதாக திருவாரூர் மாவட்டம்நன்னிலம்பேரூராட்சிக்கும்,மூன்றாவதுஇடத்தினை ஈரோடு மாவட்டத்தில் உள்ளபவானிசாகர்பேரூராட்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

சிறந்தநல் ஆளுமைக்கான விருது தமிழககாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்அவர்களுக்கும்,அப்துல் கலாம் விருதுஇஸ்ரோ தலைவர்சிவன்அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த துணிவு சாகச செயலுக்கானகல்பனா சாவ்லாவிருது கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர்ரம்யா லட்சுமிஅவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மாநில இளைஞர்களுக்கான விருதுஆண்கள் பிரிவில்,நவீன் குமார்( நாமக்கல்),ஆனந்த் குமார்( திண்டுக்கல்), ஆகியோருக்கும், பெண்கள் பிரிவில்கலைவாணிமதுரையை சேர்ந்த பெண்ணிற்கும்  வழங்கப்பட்டது.

திருடர்களை விரட்டி அடித்ததிருநெல்வேலியை சேர்ந்த வீரத்தம்பதிசண்முகவேலுமற்றும்செந்தாமரைஆகியோருக்கு அதிவீரதீர செயல்கள் புரிந்ததாக துணிவுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.