TNGOVT: துணைவேந்தர் நியமனம் – ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

தமிழ்நாட்டில் கலியாகவுள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில்

tn governor tnpsc

தமிழ்நாட்டில் கலியாகவுள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், சென்னை, கோவை உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.  துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற ஆளுநரின் நிபந்தனையால் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதியின்படி யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அதாவது, யுஜிசி விதிகளை மட்டுமே பின்பற்றினால் போதும், உறுப்பினரை புதிதாக சேர்க்க தேவையில்லை என ஆளுநரின் கோரிக்கையை ஏற்க முடியாது என தமிழக அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.